Home Featured தமிழ் நாடு செங்கோட்டையனை பொதுச்செயலாளராக ஆக்க சசிகலா திட்டமா?

செங்கோட்டையனை பொதுச்செயலாளராக ஆக்க சசிகலா திட்டமா?

735
0
SHARE
Ad

Sasikalaசென்னை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்துவிட்டதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் படி, அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டயனை நியமிக்க சசிகலா தரப்பு முயற்சி செய்துவருவதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் நேற்று திங்கட்கிழமை இரவு முழுவதும் தங்கியிருந்த சசிகலா, தனக்கு எதிராக தீர்ப்பு அமைந்துவிட்டால் என்ன செய்யலாம்? என தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் விவாதிருக்கிறார்.

அதன்படி, தீர்ப்பு பாதகமாக அமையும் பட்சத்தில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் விசுவாசமாக இருக்கும் செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

மேலும், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் தற்போதைய நிலவரச் செய்திகள்:

  • தீர்ப்பு வெளியானவுடன் கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்குள் அதிரடிப்படையினர் உடனடியாக நுழைந்தனர்.
  • சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டதாக அங்கிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
  • தீர்ப்பைக் கேட்டுவிட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், கூவத்தூரில் சசிகலாவைச் சந்திக்கச் செல்கிறார்.
  • பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
  • பன்னீர்செல்வத்திற்கு மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
  • 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.