கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம் மீது, விஷம் தெளித்து விட்டு, வாடகைக் கார் மூலம் இரு பெண்கள் தப்பிச் சென்றது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த இரகசிய கேமராப் பதிவுகளின் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த இரு பெண்களும் தப்பிச் சென்ற வாடகைக் கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த இரு பெண்களும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.