Home Featured தமிழ் நாடு சரணடைய அவகாசம் கிடையாது – சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு!

சரணடைய அவகாசம் கிடையாது – சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு!

699
0
SHARE
Ad

sasikalaபுதுடெல்லி – சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர், சரணடைய கால அவகாசம் கேட்டு வாய்மொழியாக கோரியிருந்தனர்.

இந்நிலையில், சரணடைய கால அவகாசம் அளிக்க முடியாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து, தற்போது போயஸ் கார்டனில் இருக்கும் சசிகலா, இன்று புதன்கிழமை மாலையே பெங்களூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.