கோலாலம்பூர் – மலேசிய விமான நிலையத்தில் விஷம் தெளித்துக் கொல்லப்பட்ட வடகொரிய அதிபரி சகோதரர் கிம் ஜோங் உம், கிம் ஜோல் என்ற பெயரிலான போலிக் கடப்பிதழ் மூலம் மலேசியா வந்ததாக காவல்துறைக் கூறுகின்றது.
எனினும், அவர் மலேசியாவிற்கு வந்ததற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கிம் ஜோங் உம்மின் சடலம், பலத்த காவல்துறைப் பாதுகாப்போடு, புத்ராஜெயா மருத்துவமனையில் இருந்து இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
விரைவில் அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெறவிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மலேசியா வந்த கிம் ஜோங் உம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, திங்கட்கிழமை மாச்சாவ் செல்வதற்காக கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் காத்திருந்த போது, இரண்டு பெண்களால் விஷம் தெளித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.