Home Featured இந்தியா பெங்களூரு சிறையை அடைந்தார் சசிகலா!

பெங்களூரு சிறையை அடைந்தார் சசிகலா!

660
0
SHARE
Ad

sasikala-

பெங்களூரு – (மலேசிய நேரம் 8.00 மணி நிலவரம்) தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்ட சசிகலா சற்று முன் பெங்களூரு பரப்பன்ன சிறைச்சாலையை அடைந்தார்.

அங்கு அவருக்காக காத்திருந்த சிறப்பு நீதிபதி ஒருவரிடம் சசிகலா சரண்டைந்தார்.

#TamilSchoolmychoice

சசிகலா சிறைத்தண்டனையைத் தொடங்குவதற்கு முன்பாக இரண்டுவார கால அவகாசம் தரப்பட வேண்டுமென அவரது வழக்கறிஞர்கள் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

சசிகலாவின் உடல்நலம், அவர் பெண் என்பதால் அதற்காக அவர் செய்துகொள்ள வேண்டிய சில முன்னேற்பாடுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

பெங்களூரில் சசிகலா வருகைக்காக அவரது கணவர் நடராஜனும், மக்களவைத் துணைத் தலைவருமான தம்பிதுரையும் காத்திருந்தனர்.

சிறைத்தண்டனையைத் தொடங்குவதற்கு இரு வார கால அவகாசம் நீதிபதியால் வழங்கப்படுமா இல்லையா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.

அவ்வாறு அவகாசம் வழங்கப்படவில்லை என்றால், இன்று முதல் சசிகலா சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும்.

-செல்லியல் தொகுப்பு