Home Featured தமிழ் நாடு பழனிசாமி மீது சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு

பழனிசாமி மீது சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு

632
0
SHARE
Ad

Edapadi Palanisamyசென்னை – எதிர்வரும் சனிக்கிழமை 18 பிப்ரவரி 2017-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு, இன்று வியாழக்கிழமை பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு 15 நாட்கள் கால அவகாசத்தை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கூடிய விரைவிலேயே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கில் நாளை மறுநாள் சனிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பழனிசாமி முன்வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் கூவத்தூர் உல்லாச விடுதியிலேயே தங்கியிருக்கின்றனர்.

முதல்வராகப் பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா, எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் பழனிசாமி மீண்டும் கூவத்தூர் சென்று சக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டார். அங்கிருந்து சனிக்கிழமையன்று சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான வியூகங்களை பழனிசாமி குழுவினர் வகுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தின் முதல்வராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.