Home Featured தமிழ் நாடு பழனிசாமி – அமைச்சர்கள் நினைவிடங்களில் அஞ்சலி!

பழனிசாமி – அமைச்சர்கள் நினைவிடங்களில் அஞ்சலி!

896
0
SHARE
Ad

Edapadi palanisamyசென்னை – இன்று வியாழக்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவைக் குழுவினரும் முதல் பணியாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்திற்கும், அதன் பின்னர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கும் சென்று அவர்கள் மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றிருக்கும் டிடிவி தினகரனும் நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice