கோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மின் சடலத்தை பாதுகாப்பது தொடருமா? அல்லது அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது காவல்துறையின் முடிவில் தான் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
காரணம், ஜோங் நம்மின் உறவினர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதால், சடலத்தை அனுப்பி சான்றிதழ் வழங்குவது அதிகார வரம்பிற்குட்பட்டு இருப்பதாகவும் டாக்டர் சுப்ரா கூறினார்.
இதனிடையே, கிம் ஜோங் நம்மின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நாளை புதன்கிழமை வெளியிடப்படலாம் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.