Home Featured தமிழ் நாடு 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா – கோவை வருகிறார் மோடி!

112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா – கோவை வருகிறார் மோடி!

1313
0
SHARE
Ad

Adiyogiகோவை – கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிவனின் முகத் தோற்றம் கொண்ட 112 அடி உயரமுள்ள சிலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை மாலை கோயம்பத்தூர் வருகின்றார்.

டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5.30 மணியளவில் கோவை வரும் அவர், சிலையைத் திறந்து வைத்து உரையாற்றிவிட்டு, இரவு 9 மணியளவில் மீண்டும் டில்லி புறப்படுகின்றார்.

மோடி வருகையையொட்டி, கோவையில் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் நகரைச் சுற்றிப் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், மஹா சிவராத்திரியை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. அதில் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு சிவராத்திரி இன்னும் கூடுதல் சிறப்பாக, ஆதியோகி சிவனின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவிருக்கின்றது. இவ்விழாவில் மோடியுடன், தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.