இந்த திருமுகத்தைத் திறந்து வைப்பதுடன், உலகெங்கும் நடைபெற உள்ள மகா யோக வேள்வியை பிரதமர், புனித தீமூட்டி தொடங்கி வைக்கவுள்ளார். பிரம்மாண்டமாக நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் அம்சமாக ஆதியோகி திருவுருவமும் திறக்கப்பவிருக்கிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின் முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட, உலக அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.
இந்தச் சிலை இன்று மாலை இந்திய நெரப்படி 6 மணியளவில் (மலேசிய நேரப்படி இரவு 8.30 மணிக்கு) அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா காணவிருக்கின்றது.
அதனை அஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-ல் நேரலையாகக் கண்டுகளிக்கலாம்.