மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
அதன் படி,
- சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘தி சேல்ஸ் மேன் – The Salesman’ என்ற ஈரான் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
- சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது ‘ஜூத்தோப்பியா – Zootopia’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
- ‘சூசைட் ஸ்குவாட் – Suicide Squad’ என்ற திரைப்படத்திற்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகிய இருவருக்கும் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது.
- ‘மூன்லைட் – Moon Light’ திரைப்படத்திற்காக மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
- ‘பென்செஸ் – Fences’ திரைப்படத்திற்காக வயோலா டேவிசுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் தொடரும்..
Comments