Home Featured உலகம் ஜெர்மன் பிணைக் கைதியின் தலையைத் துண்டித்தது அபு சயாப்!

ஜெர்மன் பிணைக் கைதியின் தலையைத் துண்டித்தது அபு சயாப்!

1104
0
SHARE
Ad

Abu sayafமணிலா – பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அபு சயாப் என்ற தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி வைத்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜார்ஜென் காந்தரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை தலையை துண்டித்துக் கொலை செய்தது.

அதனைக் காணொளியாகவும் பதிவு செய்து இன்று திங்கட்கிழமை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அக்காணொளியை தீவிரவாதக் கண்காணிப்புக் குழுவான சைட் (SITE), மறுவெளியீடு செய்திருப்பதோடு, காணொளியில் இருப்பது ஜார்ஜென் காந்தர் தான் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தாங்கள் கேட்கும் 30 மில்லியன் பிசோஸ் (மலேசிய மதிப்பில் 2.6 மில்லியன் ரிங்கிட்) பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், பிப்ரவரி 26-ம் தேதி, ஜூர்ஜென் காந்தரைக் கொலை செய்யப் போவதாக ஏற்கனவே அபு சயாப் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

அதன் படி, பிணைத்தொகை கிடைக்காத காரணத்தால், நேற்று காந்தரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனது மனைவி சபின் மெர்சுடன் பிலிப்பைன்சுக்கு சுற்றுலா வந்திருந்த காந்தர், பிலிப்பைன்சின் ஆபத்தான கடற்பகுதியில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, அபு சயாப் இயக்கத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.

அப்போது காந்தரின் மனைவி தன்னை விடுவிக்க அவர்களை எதிர்த்துப் போராடியதால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: AFP