Home Featured தமிழ் நாடு சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் – மதுரை நீதிமன்றம் உத்தரவு!

சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் – மதுரை நீதிமன்றம் உத்தரவு!

830
0
SHARE
Ad

seemai_karuvela_maramமதுரை – சீமைக் கருவேல மரங்களை அகற்ற, 2 மாதத்திற்குள் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்திருந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் முடிவில், இன்னும் 2 மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் கொண்டு வந்து, மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கி அதனை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.