லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கார் விருதுகள் விழா தொடங்குவதற்கு முன்னால் நடைபெறும் சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது உலகப் பிரசித்தம்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து தங்களின் அபிமான ஹாலிவுட் நடிகர்-நடிகையர் எத்தகைய ஆடை அணிகலன்கள் அணிந்து வரப் போகின்றார்கள் – எப்படியெல்லாம் கவர்ச்சி காட்டப் போகிறார்கள் – என ஆவலுடன் சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து இரசிக்கும் நேரம்தான் சிவப்புக் கம்பள வரவேற்பு நேரம்.
இந்த முறையும் இரசிகர்களை ஏமாற்றாமல் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் அழகான – அசத்தலான – தோற்றத்தோடு சிவப்புக் கம்பள வரவேற்பில் வலம் வந்தனர்.
முதல் படமாக நீங்கள் மேலே காண்பது – பிரியங்கா சோப்ரா!
என்ன? ஹாலிவுட் நட்சத்திரங்கள் என்று கூறிவிட்டு, நமது இந்திப் படவுலகின் பிரியங்கா சோப்ரா சிவப்புக் கம்பள வரவேற்பிலா என நீங்கள் நினைக்கலாம்!
ஆம்! இப்போது, குவாண்டிகோ என்ற தொலைக்காட்சித் தொடர் மற்றும் சில ஆங்கிலப் படங்களில் நடித்து வருவதன் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கின்றது ஆஸ்கார் விருதுகள் விழாக் குழு!
சிவப்புக் கம்பள வரவேற்பில் அழகு காட்டிய மேலும் சில நட்சத்திரங்களையும் உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகின்றோம்:
சல்மா ஹேய்க் (Salma Hayek) – பல படங்களில் கவர்ச்சி காட்டிய இவரை இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்…
ஜெனிபர் லாரன்ஸ் (Jennifer Lawrence) – இன்றைய நாளில் இளைஞர்களின் கனவுக் கன்னி இவர்தான் – அண்மையில் இவர் நடித்து வெளிவந்த படம் ‘பேசெஞ்சர்ஸ்’ (Passengers)
சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லா லா லேண்ட்’ படத்தின் கதாநாயகி எம்மா ஸ்டோன்…இறுதியில் வெற்றி பெற்றதும் அவர்தான்!
ஸ்கார்லெட் ஜோஹான்சன் – Scarlet Johanson
ஹாலிவுட்டின் கறுப்பின நடிகைகளில் பேரழகியாகக் கொண்டாடப்படும் ஹேல் பெர்ரி (Halle Berry)
பல முறை சிறந்த நடிகை மற்றும் துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற மெரில் ஸ்ட்ரிப் (Merryl Streep) – இந்த முறையும் 20-வது தடவையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் வெல்லவில்லை. இந்த முறை அந்த விருதைத் தட்டிச் சென்றது எம்மா ஸ்டோன்…
ஆஸ்திரேலிய நடிகையான நிக்கோல் கிட்மென் (Nicole Kidman) – ஹாலிவுட் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்…
இந்திய நடிகரான தேவ் பட்டேல் – ஸ்லம்டோக் மில்லியனேர் – படத்தில் கதாநாயகனாக நடித்தவர் – இந்த முறை சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் ‘லயன்’ படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை.
லா லா லேண்ட் படத்தின் இயக்குநர் டேமியன் சேசல் தனது மனைவியுடன் – சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருது பெற்றார். ஆஸ்கார் வரலாற்றில் மிக இளம் வயதில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றவர் இவர்தான்..
லயன் படத்தில் நடித்த சன்னி பவார்தான் இன்று ஹாலிவுட்டின் இளவயது ஹீரோ – 8 வயதான இந்த மும்பை சிறுவன் – ஆங்கிலமே சரியாகப் பேசத் தெரியாத இந்த சிறுவன் – தனது திறமையான நடிப்பால் ஹாலிவுட்டையே கலக்கி வருகிறான். அவனுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கின்றது ஹாலிவுட்…
-செல்லியல் தொகுப்பு