Home Featured தமிழ் நாடு நெடுவாசல் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு!

நெடுவாசல் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு!

787
0
SHARE
Ad

stalin-neduvasan-protestsபுதுக்கோட்டை – இங்குள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்துவரும் தொடர் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தார்.

பல தமிழக அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் திமுகவும் ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.

நெடுவாசல் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நெடுவாசல் வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

stalin-neduvasal-protestsநெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்…

அங்கு நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார்.

“தமிழர்களாக பிறந்திருப்பதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். நெடுவாசல் மக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்த கடிதம் மத்திய பெட்ரோலிய அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரிடம் முதல்வர் அளித்த மனுவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு இன்னும் முடிவை அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டப் போராட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை.  ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் கிராமத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படும்” என்று ஸ்டாலின் தனது உரையில் கூறினார்.

stalin-rajah-communist party- neduvasalநெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜாவுடன் ஸடாலின்

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நான் கையெழுத்திட்டதாக வைகோ கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் மீத்தேன் திட்டத்துக்குத்தான் நான் கையெழுத்திட்டேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.