ஜார்ஜ் டவுன் – அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்திருந்த சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லா மீது தாக்குதல் நடத்த, ஏமன் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் திட்டம் போட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
புக்கிட் அம்மான் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு அவர்கள் நால்வரையும் சரியான நேரத்தில் கைது செய்ததையடுத்து, அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இத்தகவலை வெளியிட்டார்.
கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சைபர் ஜெயா அருகே ஏமன் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.