Home Featured தமிழ் நாடு 23 நாட்கள் நீடித்த நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

23 நாட்கள் நீடித்த நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

723
0
SHARE
Ad

neduvasal-protests-hydro carbonபுதுக்கோட்டை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) புதுக்கோட்டை பகுதியிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருக்கிறது.

போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தற்காலிகமாகக் கைவிடப்படுகிறது என்பது மட்டுமே உண்மை நிலை என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.