புதுடெல்லி – கோவா மாநில முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை தான் பதவி ஏற்கவிருப்பதையடுத்து, மத்தியத் தற்காப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனோகர் அளித்தார். அதனை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அப்பதவி வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.