Home Featured நாடு செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்பள்ளியில் ஸ்டார் புரோடிஜி அகாடமி!

செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்பள்ளியில் ஸ்டார் புரோடிஜி அகாடமி!

896
0
SHARE
Ad

Storedigiகோலாலம்பூர் – “நாம் கற்றுத் தருவது மாணவர்களுக்குப் புரியாவிடில், அவர்களுக்குப் புரியும் வண்ணம் நாம் கற்றுக் கொடுப்பது அவசியமாகும்”. இதுவே ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் தாரக மந்திரம்.ஆனால் இது நிறைவேற ஒவ்வொரு மாணவனின் கற்றல் திறன் என்ன என்பதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டும். இந்தக் கருத்தினை நாடெங்கிலும் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்வதே, ஸ்டார் புரோடிஜி அகாடமியின் தலையாய கடமை என அதன் தோற்றுனரும் நாடறிந்த பட்டறை பயிற்றுனருமான செந்தில் நாதன் தெரிவித்தார்.

அவ்வகையில் கடந்த மார்ச் 11-ம் தேதி,  சனிக்கிழமை, செந்தூலில் இயங்கி வரும் செயிண்ட் ஜோசப் பெண்கள்  தமிழ்ப்பள்ளியில் ஸ்டார் புரோடிஜியினர் தங்களது கற்றல் கற்பித்தல் பட்டறையை வெகு சிறப்பாக நடத்தியிருந்தனர். ஆசிரியர்களுக்காகவே பிரத்தியேகமாக நடைபெற்ற இப்படறையில், கற்றலின் வழிமுறைகளான பார்த்தல்; கேட்டல்; தொடுதல் முறைகளின் வழி கற்கும் மாணவர்களின் குணாதிசயங்கள் மற்றும் வெவ்வேறு கற்றல் முறை கொண்ட மாணவர்களுக்கு எப்படி போதிப்பதென விளக்கமாக விவரிக்கப்பட்டது.

Storedigi1மேலும், “ வகுப்பில் எந்நேரமும் துறு துறுவென வளைய வரும் மாணவர்கள் இதில் எந்த ரகத்தை சார்ந்தவர்கள்? பல சமயங்களில் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் மாணவர்களை எவ்வாறு லாவகமாக கையாளலாம்?” போன்ற எண்ணற்ற வினாக்கள் இங்கே கலந்தாலோசிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

செயிண்ட் ஜோசப் பெண்கள்  தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வளர்மதி தலைமையில் பள்ளி சிறப்பான அடைவுநிலையை அடைந்து வருவதோடு, அவருக்கு உறுதுணையாக இப்பள்ளியின் ஆசிரியைகள் அர்பணிப்பு உணர்வுடன் தத்தம் கடைமைகளை செவ்வனே செய்து வருகின்றனர். காலை வேளையில் மாணவர்களின் வகுப்புக்கள் தொடங்கும் முன் ; யோகாசன  பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்ற ஆரோக்கிய நடவடிக்கைகளுக்கும் இங்கே இடமளிக்கப்படுகின்றன.

மேலும், பள்ளியின் அடைவுநிலை மேம்பட்டு வருவதன் காரணமாக ஆண்டுதோறூம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், ஆனால் வகுப்பு பற்றாக்குறையின் காரணமாக தம்மால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை பள்ளியில் இணைத்துக் கொள்ள முடியவில்லையென திருமதி.வளர்மதி வருத்தம் தெரிவித்தார். இதற்கு தீர்வு காணும் நோக்கில், இவ்விசியத்தினை கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், அதற்கான தீர்வு விரைவில் கிடைக்குமென்று திடமாக உள்ளார் அவர்.

Storedigi2ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான கண்ணா சிம்மாதிரி ( அஸ்ட்ரோ விழுதுகள் புகழ்), இந்த கற்றல் கற்பித்தல் பட்டறையை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த கற்றல் கற்பித்தல் பட்டறையினை நாடளாவிய நிலையில் அனைத்து தமிழ்பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு ஸ்டார் புரோடிஜியோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார் கண்ணா. இப்பட்டறையினை தத்தம் பள்ளிகளில் ஏற்று நடத்த விரும்பும் ஆசிரியர்கள் 012-560 7003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.