Home Featured நாடு ஜோகூர் இளவரசர் காற்பந்து சங்கத் தலைவரானார்!

ஜோகூர் இளவரசர் காற்பந்து சங்கத் தலைவரானார்!

770
0
SHARE
Ad

tunku-ismail-sultan-ibrahim

கோலாலம்பூர் – மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவராக ஜோகூர் மாநில இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற மலேசியக் காற்பந்து சங்கத்தின் 53-வது மாநாட்டில் சங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹாமிடின் முகமட் அமின் இந்த அறிவிப்பை விடுத்தார்.

#TamilSchoolmychoice

கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசா காற்பந்து சங்கத்துக்கான தலைமைத்துவப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து துங்கு இஸ்மாயில் அந்த சங்கத்தின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காற்பந்து சங்கத்தில் நீண்ட காலம் தொடர்பு கொண்ட டத்தோ எஸ்.சிவசுந்தரம் காற்பந்து சங்கத்தின் நான்கு உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டத்தோஸ்ரீ சுபஹான் கமால், டத்தோ யூசோப் மஹாலி ஆகிய இருவரும் சங்கத்தின் இரு துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.