ஜெனிவா – இலங்கையில் 2009–ம் ஆண்டு இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் 2015–ம் ஆண்டில் விடுத்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன.
இந்த முடிவுக்கு, இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் வரவேற்பு தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மன்றத்தில் ஆதரவு வழங்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கமும் நன்றி தெரிவித்துள்ளது.