Home Featured உலகம் பண்டா ஆச்சேவில் கேமராவில் சிக்கிய மர்ம உருவம்!

பண்டா ஆச்சேவில் கேமராவில் சிக்கிய மர்ம உருவம்!

953
0
SHARE
Ad

Acheஜகார்த்தா – இந்தோனிசியாவில் பண்டா ஆச்சே பகுதியை மோட்டார் பந்தயக் குழுவைச் சேர்ந்த சிலர், மேற்குப் பகுதியில் இருந்த காடு ஒன்றில், மோட்டார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிரே வந்த மர்ம உருவம் ஒன்றால், அதிர்ச்சியில் உறைந்தனர்.

அக்காணொளி தற்போது யுடியூப் தளத்தில் பகிரப்பட்டு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

அக்காணொளியில், கண் எதிரே தோன்றிய திடீர் உருவத்தைக் கண்டு முன்னே சென்ற மோட்டார் ஓட்டி நிலைதடுமாறி கீழே விழ, பின்னால் வரும் மோட்டார் ஓட்டிகள், அந்த உருவத்தைத் துரத்திச் செல்கின்றனர். மிக வேகமாக ஓடும் அந்த உருவம், அருகில் இருக்கும் புதர் ஒன்றில் நுழைந்து மறைந்துவிடுகிறது.

#TamilSchoolmychoice

மனித உருவத்தில், தலை முடி எதுவும் இன்றி நிர்வாணமாகத் தெரியும் அந்த உருவம் பார்ப்பதற்கு மிகவும் குள்ளமாக இருக்கின்றது.

பிரடோகிராபி என்ற யூடியூப் சேனல் பகிர்ந்திருக்கும் அக்காணொளியை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர்.

இதனிடையே, காணொளியில் தெரியும் அந்த உருவம் மந்தே பழங்குடியின மக்களைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆச்சே பகுதியைச் சேர்ந்த மூத்த குடி மக்கள் கூறியிருக்கின்றனர்.