Home Featured வணிகம் ‘லெக்கின்ஸ்’ தடையால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யுனைட்டட் ஏர்லைன்ஸ்!

‘லெக்கின்ஸ்’ தடையால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் யுனைட்டட் ஏர்லைன்ஸ்!

968
0
SHARE
Ad

N768UA-United-Airlinesசிக்காகோ – லெக்கின்ஸ் அணிந்திருந்த காரணத்திற்காக இரு சிறுமிகளை விமானத்தில் ஏற்ற மறுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நட்பு ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்வெரில் இருந்து மின்னியாபோலீஸ் நகரை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில், ஏறவிருந்த இரு சிறுமிகளை, அவ்விமான நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அவர்கள் அணிந்திருந்த லெக்கின்ஸ் உடையை மாற்றிவிட்டு வருமாறு உத்தரவிட்டிருக்கின்றனர்.

இத்தகவல் நட்பு ஊடகங்களில் பரவ இணையவாசிகள் பலரும் விமான நிறுவனத்தின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

‘மாம்ஸ் டிமாண்ட் ஆக்சன் ஃபார் கன் ரீஃபார்ம்ஸ்’ என்ற அமைப்பின் நிறுவனர் ஷானான் வாட்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், விமான நிறுவனம் ஏன் அச்சிறுமிகளைத் தடுத்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலளித்திருந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம், அப்பெண்கள் இருவரும் ‘யுனைட்டட் பாஸ் டிராவலர்ஸ்’ என்ற டிக்கெட்டைப் பயன்படுத்திப் பயணம் செய்ததாகவும், அந்த டிக்கெட்டைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட உடை அணிவது அவசியம் என்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் தெரிவித்திருக்கிறது.