மும்பை – வரும் ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியாவின் முதல் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கவிருக்கிறார்.
உடாம்பூரிலிருந்து ரம்பானுக்கு இடையிலான ‘செனானி நஸ்ரி’ என்ற அந்த சுரங்கப் பாதை 10.89 கிலோமீட்டர் தூரம் கொண்டது. ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் வகையில் மலையைக் குடைந்து அந்தச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
2,519 கோடி ரூபாய் நிதியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப் பாதை, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கும் இடையில் 286 கிலோமிட்டருக்கு உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நான்கு வழி நெஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.