புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தனது இந்திய வருகையைத் தொடர்ந்த பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு, இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி தனது அதிபர் மாளிகையில் மரியாதை அணிவகுப்புடன், அதிகாரபூர்வ வரவேற்பை வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு சந்திப்புகளை நஜிப் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடும், அமைச்சர்களோடும் நடத்தினார். இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
சென்னையில் இரண்டு நாள் வருகையை முடித்துக் கொண்டு புதுடில்லி வந்தடைந்த நஜிப் விமான நிலையத்தில் வரவேற்கப்படுகின்றார்…
புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகையில் நஜிப்புக்கு மரியாதை அணிவகுப்புடன் வழங்கப்பட்ட வரவேற்பு….
இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி நஜிப்பை வரவேற்கிறார்…
இந்திய துணை அதிபர் ஹமிட் அன்சாரியுடன் சந்திப்பு நடத்தும் நஜிப்….
அதிபர் பாளிகையில் வழங்கப்பட்ட வரவேற்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நஜிப்….
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்….
-செல்லியல் தொகுப்பு
(படங்கள்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் மற்றும் இணையத் தளம்)