Home Featured தமிழ் நாடு நஜிப் குழுவினருக்கு தமிழக ஆளுநர் விருந்துபசரிப்பு!

நஜிப் குழுவினருக்கு தமிழக ஆளுநர் விருந்துபசரிப்பு!

691
0
SHARE
Ad

subra-najib-chennai visit-1சென்னை – வியாழக்கிழமை (மார்ச் 30) சென்னை வந்தடைந்த பின்னர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழக ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது குழுவினருக்கு தமிழக ஆளுநர் விருந்துபசரிப்பு நடத்தி கௌரவித்தார்.

இந்தியா வந்திருக்கும் நஜிப் குழுவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் இடம் பெற்றிருக்கிறார்.

தமிழக ஆளுநருடனான, நஜிப்பின் சந்திப்பின்போது மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும், தெற்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்பு மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவும் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

subra-tamil nadu cm palanisamy-najib-visitவிருந்துபசரிப்பின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடும் டாக்டர் சுப்ரா…

subra-najib-visit-chennai-vigneswaranதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், பிரதமர் நஜிப்புக்கு அளித்த விருந்துபசரிப்பில், கலந்து கொண்ட மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி, மற்றும் மஇகா தேசிய உதவித் தலைவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

-செல்லியல் தொகுப்பு