Home Featured இந்தியா சென்னையில் மலேசிய மாணவர்களுடன் நஜிப் சந்திப்பு

சென்னையில் மலேசிய மாணவர்களுடன் நஜிப் சந்திப்பு

703
0
SHARE
Ad

najib-chennai-visit-meeting students-1

சென்னை – நேற்று வெள்ளிக்கிழமை தனது இரண்டு நாள் சென்னை வருகையை முடித்துக் கொண்டு, புதுடில்லி புறப்படும் முன்னர் பிரதமர் நஜிப் துன் ரசாக், சென்னையில் பயின்று கொண்டிருக்கும் மலேசிய மாணவர்களைச் சந்தித்து அளவளாவினார்.

இந்த சந்திப்பில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

najib-chennai-visit-meeting students-2

“மலேசிய மாணவர்கள் கண்களுக்குத்தான் மலேசியா தூரத்தில் இருக்கிறது. ஆனால், மனதால் நாம் மிக அருகாமையில் இருக்கிறோம்” என தனது மாணவர் சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் தெரிவித்திருந்தார்.

இன்று சனிக்கிழமை புதுடில்லியில் தனது அதிகாரத்துவ இந்திய வருகையை பல சந்திப்புகளுடன் நஜிப் தொடர்ந்தார்.

najib-chennai-visit-meeting students