புதுடில்லி – தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தது என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
வழக்கம்போல மோடியுடன் எடுத்துக் கொண்ட தம்படம் (செல்பி) ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நஜிப், மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்ச கட்ட நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments