Home அரசியல் அன்வார் தொடுத்த வழக்கிற்கு பதிலடி – அந்த சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டார் பபகொமோ

அன்வார் தொடுத்த வழக்கிற்கு பதிலடி – அந்த சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டார் பபகொமோ

752
0
SHARE
Ad

untitled2

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22  – பபகொமோ (Papagomo) என்ற பெயரிலான தனது இணையத் தளப் பக்கத்தில் கடந்த 16.3.2013 ஆம் தேதி  அன்வாரைப் போன்று  தோற்றமளிக்கும் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்காக,வான் முகமட் அஸ்ரி முகமட் டெரிஸ் என்ற அந்த இணையத் தள எழுத்தாளர் மீது எதிர்க்கட்சி தலைவராகிய அன்வார் இப்ராகிம் அவதூறு வழக்கு தொடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பபகொமோ தற்போது அந்த சர்ச்சைக்குரிய காணொளியையும் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த 2.37 காணொளி பற்றி பபகொமோ தனது வலைத்தளத்தில்,

“சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டதற்காக அன்வார், 100 மில்லியன் கேட்டு என் மீது அவதூறு வழக்கு தொடுத்தார். எனவே இப்போது அந்த காணொளியையும் வெளியிட்டுள்ளேன்.அனைவரும் அந்த காணொளியைப் பாருங்கள், அதில் இருப்பவர் அன்வாரா?, இல்லையா?என்று உங்களால் நிச்சயம் யூகிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

அந்த காணொளியில் அன்வார் போன்ற ஒரு மனிதரும், மற்றொரு ஆடவரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டு இருப்பது போல் காட்சிகள் உள்ளன. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள், அதன் பின் என்ன நடந்தது போன்றவை அந்த காணொளியில் இடம்பெறவில்லை.

மேலும் , அதே காணொளியில் மற்றொரு பட்டதாரியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவரை பாதுகாக்க அவரது நண்பர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்  பபகொமோ தெரிவித்துள்ளார். இதுபோன்று இன்னும்  நிறைய காணொளிகளை தான் பதிவேற்றம் செய்யவிருப்பதாகவும் பபகொமோ எச்சரித்துள்ளார்.