Home Featured நாடு சட்டத்தைக் கையில் எடுக்க நீங்கள் யார்? – பபகொமோவிற்கு எதிராகப் பலர் கேள்வி!

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்கள் யார்? – பபகொமோவிற்கு எதிராகப் பலர் கேள்வி!

716
0
SHARE
Ad

papagomaகோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளரான பபகொமோ என்ற வான் அஸ்ரி வான் டெரிஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சர்ச்சை மூலமாக ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

தனது இரு தங்கைகளுக்கும், அவர்களது தோழிகளுக்கும் வெளிநாட்டினர் ஒருவர் தொல்லை கொடுத்தத்தாகக் கூறி, அந்நபர் பணியாற்றும் இடத்திற்கே சென்று அவரை அடித்து உதைத்து எச்சரிக்கை விடுத்தார்.

இந்தக் காணொளி நட்பு ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், பபகொமோவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பபகொமோ யார்? நீதிபதியா? அல்லது சட்டத்தில் இருப்பவரா? அவர் எப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இப்படி வெளிநாட்டினரை அடித்து உதைக்கலாம்? பின் எதற்கு சட்டஒழுங்கு என்று இந்த நாட்டில் உள்ளது? போன்று பபகொமோவிற்கு எதிராகப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேவேளையில், ஒரு அண்ணனாக அவர் தனது செய்தது சரி தான் என்ற வகையிலும் சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய காவல்படையின் துணைத் தலைவரான நூர் ரஷீத் இப்ராகிம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பபகொமோ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினரோ, உள்நாட்டினரோ சட்டத்தை அவர் கையில் எடுத்தது தவறு தான் என்றும் நூர் ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.