Home Featured நாடு திரெங்கானுவில் சாலையில் சுற்றித் திரிந்த புலி கார் மோதி பலி!

திரெங்கானுவில் சாலையில் சுற்றித் திரிந்த புலி கார் மோதி பலி!

864
0
SHARE
Ad

Tigerகெமாமன் – இன்று அதிகாலை 1 மணியளவில் கெமாமன் கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் கிலோமீட்டர் 321.2 2 அருகே, சுற்றித் திரிந்த புலி ஒன்று அவ்வழியே வந்த கார் ஒன்றில் மோதி பலியானது.

இந்தச் சம்பவத்தை பொது ஒழுங்கு மற்றும் போக்குவரத்து தலைமைக் கண்காணிப்பாளர் மொகமட் கமாலுதின் உறுதிப்படுத்தியிருப்பதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இறந்த புலியின் உடல் கைப்பற்றப்பட்டு, வனவிலங்கு இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சுற்றுலாத் தளமான கெமாமனில் வனவிலங்கு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்தப் புலி அங்கிருந்த வந்ததா? அல்லது காட்டில் இருந்து வந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, புலியை மோதிய காரில் இருந்த 4 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இரவு நேரங்களில் மாடுகள், மான்கள், தாபிர் போன்றவை அச்சாலையை கடக்கும் என்பதால், வாகனமோட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென மொகமட் கமாலுதின் தெரிவித்துள்ளார்.

எனினும், அச்சாலையில் புலி காணப்பட்டிருப்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகின்றது.

படம்: பேஸ்புக்