Home Featured நாடு அகமட் பாஷா மீது நஜிப் நம்பிக்கை: கெடா வளர்ச்சிக்கு 15 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்!

அகமட் பாஷா மீது நஜிப் நம்பிக்கை: கெடா வளர்ச்சிக்கு 15 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்!

594
0
SHARE
Ad

Najibகூலிம்- கெடா புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ அகமட் பாஷா அம்மாநிலத்திற்கு அதிகளவு முன்னேற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

கெடா மாநில மக்களின் நல்வாழ்வும் வசதிகளும் மேம்பட அகமட் பாஷா தனது பணிகளை கச்சிதமாக மேற்கொள்வார் எனத் தாம் நம்புவதாக பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

லூனாசில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசியபோதே பிரதமர் நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நானும் கூட்டரசு அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களும் கெடாவில் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அகமட் பாஷாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தனது பணிகளை நல்லவிதமாக, சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகிறோம்,” என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

மேலும், கோல மூடா மாவட்டத்தில் வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க 15 மில்லியன் ரிங்கிட் வேண்டும் என்று அகமட் பாஷா வைத்திருந்த கோரிக்கை ஏற்று அதற்கும் நஜிப் அங்கீகாரம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் அகமட் பாஷா, கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்திர் காலிட், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கெடா மந்திரி பெசாராக இருந்த முக்ரிஸ் பதவி விலகியதையடுத்து 66 வயதான அகமட் பாஷா கெடாவின் புதிய மந்திரி பெசாராக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.