Home Featured உலகம் சிறுத்தை தென்பட்டதால் நேபாள விமான நிலையம் மூடப்பட்டது!

சிறுத்தை தென்பட்டதால் நேபாள விமான நிலையம் மூடப்பட்டது!

1013
0
SHARE
Ad

Leopardகாத்மாண்டு – சிறுத்தை ஒன்று விமான ஓடுபாதையில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டதால், நேற்று திங்கட்கிழமை நேபாள நாட்டிலுள்ள அனைத்துலக விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டது.

விமானி ஒருவர் அச்சிறுத்தையைக் கண்டு, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அரை மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதில், ஒரே ஒரு அனைத்துலக விமானம் தான் தாமதமானது, மற்றவை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டதாக திரிபுவன் அனைத்துலக விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருக்கும் இந்த அனைத்துலக விமான நிலையம், வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி வனவிலங்குகள் தென்படுவது வாடிக்கையான ஒன்று.

எனினும், விமான நிலைய நிர்வாகம் அவைகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும், கடந்த 2016-ம் ஆண்டு, 9 பயணிகளுடன் புறப்பட்ட சிறிய இரக விமானம் ஒன்றின் வலது பக்க இறக்கையில் பறவை ஒன்று சிக்கிக் கொண்டதால், அவ்விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு, அவ்விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் மீது, பறவை மோதியதில், விமானம் விழுந்து நொறுங்கி 19 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.