Home Featured நாடு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா சலுகைகள் வழங்க விருப்பம்!

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா சலுகைகள் வழங்க விருப்பம்!

797
0
SHARE
Ad

புதுடெல்லி – மலேசியாவில் அதிக அளவில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்க இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவிருக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தில், இது குறித்து திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியத் திரைப்படங்களின் தீவிர ரசிகரான பிரதமர் நஜிப், இந்திய சினிமாவில் இருக்கும் திறமைசாலிகளுக்கு சில சலுகைகளை வழங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

najib-rajini-2-selfie

(சென்னைப் பயணத்தின் போது நஜிப், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை

நட்பு ரீதியில் சந்தித்த போது எடுத்த தம்படம்)

மலேசியா – இந்தியா சிஇஓ கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பிறகு நஜிப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளை இன்று சந்தித்தேன். நம்மால் சில சலுகைகளை வழங்க முடியுமா? என்று கேட்டார்கள்” என்று கூறினார்.

மேலும், மலேசியர்கள் இந்திய சினிமாவின் ரசிகர்கள் என்றும், குறிப்பாக பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவை மிகவும் ரசிப்பவர்கள் என்றும் நஜிப் அவர்களிடம் தெரிவித்தார்.