Home Featured நாடு “அன்வார் விடுதலைக்கு நான் துணை நிற்பேன்” – மகாதீர்

“அன்வார் விடுதலைக்கு நான் துணை நிற்பேன்” – மகாதீர்

713
0
SHARE
Ad

mahathirஷா ஆலாம் – தனது முன்னாள் அரசியல் எதிரியான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது மக்கள் விருப்பம் என்றால், அதற்குத் துணை நிற்கவும், அதைச் செயல்படுத்தவும் தயார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அறிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், அன்வாருக்காக அரச மன்னிப்பைக் கோரும் என்றால் அதில் தனக்கு உடன்பாடுதான் என்றும் மகாதீர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஷா ஆலாமில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசியபோது மகாதீர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“மக்களின் விருப்பம் அன்வாரின் விடுதலை என்றால், அதைத் தடுக்க நான் யார்?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

அன்வார் மீது இனியும் தான் கசப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் மகாதீர் கூறினார்.

துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை மகாதீர் 1998-ஆம் ஆண்டில் பதவியிலிருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து அன்வார் மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார்.

விடுதலையான பின்னர், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அன்வார் அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.