Home Featured உலகம் அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்!

அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்!

997
0
SHARE
Ad

abu-sayapமணிலா – அபு சயாஃப் இயக்கத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவனான முவாமர் அஸ்காலி என்ற அபு ராமியை, பிலிப்பைன்ஸ் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர்.

போஹோல் அருகே நேற்று பிலிப்பைன்ஸ் படையினருக்கும், அபு சயாஃப் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், அபு ராமி உட்பட 5 பேரை பிலிப்பைன்ஸ் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அபு சயாஃப் இயக்கத்தில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெகு குறைவானர்களே, அவர்களில் அபு ராமியும் ஒருவன். வழக்கமாக தலை துண்டித்துக் கொலை செய்யும் பல காணொளிகளில் இந்த அபு ராமி தான் பேசியிருப்பான் என்று பிலிப்பைன்ஸ் கூறுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட மலேசியரான பெர்னாட் செங் உட்பட பலரது கடைசிக் காணொளியில் அபு ராமி இருந்திருக்கிறான் என்றும் பிலிப்பைன்ஸ் கூறுகின்றது.

இந்நிலையில், அபு ராமியைக் கொன்றது, அபு சயாஃப் இயக்கத்திற்குப் பேரிழப்பாக இருக்கும் என்றும், இனி அவர்களின் செயல்பாடுகளில் பெரிய அளவிலான முடக்கம் ஏற்படும் என்றும் பிலிப்பைன்ஸ் நம்புகின்றது.