Home Featured உலகம் “உங்களுக்கு நாள் நெருங்குகிறது” – அபு சயாபுக்கு பிலிப்பைன்ஸ் படை எச்சரிக்கை!

“உங்களுக்கு நாள் நெருங்குகிறது” – அபு சயாபுக்கு பிலிப்பைன்ஸ் படை எச்சரிக்கை!

801
0
SHARE
Ad

phillippines-abu sayaf-militaryமணிலா – பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் உத்தரவின் படி, அபு சயாப் தீவிரவாத இயக்கத்தை மொத்தமாக அழிக்கப் புறப்பட்டிருக்கிறது பிலிப்பைன்ஸ் காவல்துறை.

அபு சயாப் இயக்கத்தினரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பிலிப்பைன்ஸ் மதிப்பில் 1 மில்லியன் வரை பரிசாகக் கொடுக்கவிருப்பதாக டூடெர்டே அறிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, பிலிப்பைன்ஸ் தேசியக் காவல்துறையின் தலைமை இயக்குநர் ரோனால்ட் “பத்தோ” டேலா ரோசா தலைமையிலான காவல்துறைப் படைப் பிரிவு, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் போஹோல் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அண்மையில் அபு சயாப்பின் முக்கியத் தலைவன் அபு ராமி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோனால்ட், அபு சயாப் இயக்கத்திற்கு நாள் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் மொத்தமாக அழிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.