Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் மற்றொரு காவலாளியா?

ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் மற்றொரு காவலாளியா?

1263
0
SHARE
Ad

Kodanadu Estateசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருக்கிறது.

அங்கு, ஓம் பகதூர், கிருஷ்ண பகதூர் என்ற இரு காவலாளிகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஓம் பகதூர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில், பங்களா அருகே முக்கால்வாசி எரிந்த நிலையில் கையுறை ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதில் ஒரே ஒரு விரல் மட்டும் எரியாமல் இருந்திருக்கிறது. அதிலுள்ள ரேகையையும், கிருஷ்ண பகதூரின் ரேகையையும் ஒப்பிட்டுப் பார்த்த காவல்துறையினர் அவை இரண்டும் பொருந்தியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

எனவே, கிருஷ்ண பகதூர் தான் ஓம் பகதூரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் காவல்துறையினர் மேல் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.