புதுடில்லி – இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக கையூட்டு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருக்கின்றது.
இதுவரை 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வரை இந்த வழக்கு விசாரணைகளில் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. ஹவாலா எனப்படும் கள்ளச் சந்தையின் மூலம் பணப் பரிமாற்றங்கள் நடந்தேறியதை காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மற்றொரு குற்றச்சாட்டைப் பதிவு செய்து அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.