Home Featured கலையுலகம் கமலஹாசன் மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை!

கமலஹாசன் மீதான வழக்குக்கு இடைக்காலத் தடை!

762
0
SHARE
Ad

Kamalhassanமதுரை – அண்மையில் இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தை இழிவாகப் பேசியதாக கமலஹாசனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன் நேரில் நீதிமன்றத்திற்கு வருகை தர வேண்டியதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மகாபாரதத்தை இழிவாக பேசியதாக வள்ளியூர் நீதிமன்றத்தில் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கை இரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் கமலஹாசன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.