புத்ராஜெயா – நாட்டின் நிர்வாகத் தலைநகரமான புத்ரஜெயா, பல மதங்களின் உறைவிடமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில், தேசிய புத்த மையம் மற்றும் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.
இது குறித்து அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் 2, டத்தோஸ்ரீ ஆங் கா சுவான் கூறுகையில், “நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி மத சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை, இந்நடவடிக்கை பிரதிபலித்து, அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான 0.27 ஹெக்டா ஏக்கர் பரப்பளவில், இந்த புத்த மையம் கட்டப்படவிருக்கிறது.
ஏற்கனவே அங்கு தேவிஸ்ரீ லலிதாம்பிகை இந்து ஆலயம் கட்டுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மலேசியாவில் வாழும் புத்த மதத்தினருக்கு புதிதாகக் கட்டப்படும் இந்த புத்த மையம் “புத்த மதத்தினரின் தலைநகரமாக” அமையும் என்றும் ஆங் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழாவில் தெரிவித்திருக்கிறார்.