Home நாடு போலீஸ் வாகனமாக இருந்தாலும் தவறு தவறு தான் – புத்ராஜெயா கெடுபிடி!

போலீஸ் வாகனமாக இருந்தாலும் தவறு தவறு தான் – புத்ராஜெயா கெடுபிடி!

1706
0
SHARE
Ad

Police Carகோலாலம்பூர் – புத்ராஜெயாவில் முறையற்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக் காவல்துறை வாகனத்தை அதிகாரிகள் முடக்கியது ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புத்ராஜெயாவில் நேற்று புதன்கிழமை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனம் ஒன்றின் சக்கரத்தில், இடுக்கி (Clamp) வைத்து புத்ராஜெயா கூட்டுறவு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பூட்டினர்.

இதனையடுத்து, அந்தக் காரை அங்கு நிறுத்திய அதிகாரிகள், பொதுமக்கள் செலுத்தும் அபராதத்தைச் செலுத்திய பிறகே, அதிகாரிகள் காரை விடுவித்ததாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

#TamilSchoolmychoice