Home Featured கலையுலகம் அஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அறிமுகம்!

அஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அறிமுகம்!

1062
0
SHARE
Ad

AstroNJOInowகோலாலம்பூர் – அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro) புதிய இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான “NJOI Now” எனும் செயலியை நேற்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

கையடக்க கருவி மற்றும் ஆன்லைன் வாயிலாகக் கிடைக்கக்கூடிய இச்சேவை, மலேசியர்கள் ஆன் டிமாண்ட் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களோடு பிரத்யேகமான அத்தியாயங்கள் கொண்ட நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரலை மற்றும் அண்மைய செய்திகள் என இலவசமாக அணுகலாம்.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையை நுகர்வோரின் தேவைகளை எந்தவொரு தடையின்றி முழுமையான நெகிழ்வு தன்மையுடன் பூர்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் “NJOI Now” மட்டுமே கையடக்க செயலி ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்கள், பிரத்யேகமான அத்தியாயங்கள்,  அஸ்ட்ரோ பிரிமா, அஸ்ட்ரோ மாயா எச்.டி, அஸ்ட்ரோ ஒயாசிஸ், அஸ்ட்ரோ ஏஇசி, அஸ்ட்ரோ வானவில் அலைவரிசைகளின் முக்கிய நிகழ்ச்சிகள், அஸ்ட்ரோ அரேனாவின் விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரலை, அஸ்ட்ரோ அவானியின் அண்மைய செய்திகள் மற்றும் அஸ்ட்ரோ டியூடர் டிவி (Tutor TV) அலைவரிசையில் கல்வி கற்றல் நிகழ்ச்சிகள் என இலவசமாக வழங்குகின்றது. இந்தச் சேவையைப் பதிவிறக்கம் செய்து கையடக்க கருவி மற்றும் ஆன்லைன் வாயிலாகச் சிறந்த உள்ளூர் மற்றும் அனைத்துலக உள்ளடங்களைக் கண்டு களிக்கலாம்.

#TamilSchoolmychoice

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக “NJOI Now” எனும் செயலியை அறிமுகப்படுத்தினார். அவரது உரையை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலே சையத் கெருவாக் வாசிக்கும் போது அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் உடனாக இருந்தார்.

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறுகையில், “NJOI Now” போன்று பல்வேறு தளங்களில் மேலும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படும் என நம்புகிறேன். இதன் மூலம், மக்களை எளிதாக அணுகி தற்போது அரசாங்கம் ஊக்குவித்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  

டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்ற மிகப் பெரிய குழு இளைஞர்கள் என்றால் அது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல. ஆகவே, தொழில் முனைவோர் ஆகுவதற்கு இளைஞர்கள் இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, அண்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய டிஜிட்டல் ஃபிரீ டிரேட் ஜோன் (Digital Free Trade Zone) எனும் திட்டம் ஊக்குவிக்கின்றது.

அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன், கூறுகையில், “கடந்த 2011-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த NJOI சேவை தற்போது 1.8 மில்லியன் வீடுகளில் ஊருவியுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் 12 மில்லியன் பார்வையார்களைச் சென்றடையும் வாய்ப்புள்ளது. இவை எங்களின் கடமைகளைக் கருத்தில் கொண்டு அதாவது டிஜிட்டல் வாழ்க்கை முறையைப் பூர்த்தி செய்வது, வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைந்து ஆன் டிமாண்ட் சேவை ஆகியவற்றை வழங்குகின்றோம்.

தற்போது அறிமுகம் கண்டுள்ள “NJOI Now” வாயிலாக மலேசியர்கள் அனைத்து திரைகளிலும், தங்கள் வீடு மற்றும் கையடக்க கருவிகளில் உள்ளடக்கங்களை இலவசமாகக் கண்டு களிக்கலாம். இந்த இலவச சேவை 2,220-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டு மற்றும் செய்திகளின் நேரலை, அஸ்ட்ரோவின் இணைய வியாபாரம் எனப்படும் கோ ஷோப் என தங்களுடைய விருப்ப அலைவரிசைகளையும் இரசிகர்கள் கண்டு மகிழலாம்.

ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களின் நேரலை ஒளிபரப்பு இலவசம்

NJOI Now பயன்படுத்துவர்கள் அஸ்ட்ரோ அரேனா அலைவரிசையில் சீ விளையாட்டு 2017 சிறப்பு நேரலை மற்றும் அஸ்ட்ரோ Supersport1 அலைவரிசையில் 11-ஆம் தேதி தொடக்கம் 31-ஆம் தேதி முதல் பிரிமியர் காற்பந்து லீக் நிகழ்ச்சிகளை இலவசமாக அணுகலாம்.

அதுமட்டுமின்றி, அஸ்ட்ரோ அவானியில் அண்மைய முக்கிய செய்திகள், அஸ்ட்ரோ Tutor TV அலைவரிசையில் உயர்தரமான கல்வி உள்ளடக்கங்கள், அஸ்ட்ரோ ஒயாசிஸ்-யில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பல்வகை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நாடகங்கள் என அஸ்ட்ரோ பிரிமா, அஸ்ட்ரோ மாயா, அஸ்ட்ரோ AEC மற்றும் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசைகளில் கண்டு களிக்கலாம். அதை வேளையில், கோ ஷோப் அலைவரிசையில் பார்வையாளர்கள் தனிப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தைப் பெறவும் தங்களுடைய விருப்பமான நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் சேவையின் வாயிலாகவும் இலவசமாகப் பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி, NJOI Now பயன்படுத்துவர்கள் சில சுவாரசிய (Suri Hati Mr Pilot, Isteri Tuan Ihsan, Lara Aishah; Meja Bulat Sepahtu, The Legend of Mi Yue, KL To KaraKaidu) நிகழ்ச்சிகளின் பிரத்யேகமான அத்தியாயங்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம். நிகழ்ச்சிகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும்.

NJOI Now செயலியில் குறிப்பிட்ட ஒரு சில உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அதனை ஆஃப்லைனில் போதும் காணலாம். அவ்வாறு காணும்போது இணையம் இணைப்பு அல்லது எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

பரவலான பல்வேறு பிரீமியம் உள்ளடக்கம் பார்க்க விருப்பும் பயனர்கள் முன்கட்டணம் செலுத்தும் தேர்வு

‘NJOI Now’ சேவையில் பரவலான பல்வேறு பிரீமியம் உள்ளடக்கங்களை பார்க்க விருப்பும் நபர்கள், முன்கட்டணம் செலுத்தில் சில குறிப்பிட்ட அலைவரிசைகளின் ( Astro WARNA, Astro RIA, Astro Wah Lai Toi, Hua Hee Dai) நிகழ்ச்சிகள், அஸ்ட்ரோ ஃபர்ஸ்ட் மற்றும் அஸ்ட்ரோ பெஸ்ட் அலைவரிசையில் அண்மையில் வெளிவந்த திரைப்படங்கள் மற்றும் இன்னும் பல நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்டில் கண்டு களிக்கலாம். NJOI Now பயன்படுத்துவர்கள் தங்களுடைய சொந்த பார்க்கும் பட்டியலை உருவாக்கி, எச்.டி மற்றும் இன்னும் பல உள்ளடக்கங்களை முன்கட்டணம்  (pay as you use) செலுத்தி கண்டு மகிழலாம்.

தற்போது அனைத்து மலேசியர்களும் NJOI Now சேவையைப் பதிவிறக்கம் செய்யலாம். அதுமட்டுமின்றி, பதிவு செய்யப்பட்ட இச்சேவையின் ஒரு கணக்கில் இரண்டு சாதனங்களில் பயன்படுத்தலாம். NJOI Now செயலியைப் பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் ( Google Play Store, Apple Store) அல்லது njoinow.com அகப்பக்கத்தை நாடுங்கள்.