Home Featured தமிழ் நாடு “அரசியல்வாதியாக, பேச்சாளராக மீண்டும் சந்திப்பேன்” – அம்மா சமாதியில் நடிகை விந்தியா!

“அரசியல்வாதியாக, பேச்சாளராக மீண்டும் சந்திப்பேன்” – அம்மா சமாதியில் நடிகை விந்தியா!

806
0
SHARE
Ad

Actressvindhyaசென்னை – அரசியலில் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் பிரபலங்களுக்கெல்லாம் வசதியான இடமாக ஆகிவிட்டது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் சமாதி.

ஓபிஎஸ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பின்னர் அவரது கணவர் மாதவன் எனப் பலரும் தங்களது அரசியல் காய்களையெல்லாம் அம்மா சமாதிக்கு வந்தே நகர்த்தினர்.

அந்த வரிசையில், நடிகை விந்தியாவும் நேற்று புதன்கிழமை திடீரென அம்மா சமாதிக்கு வந்தார். வந்தவர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்த பொதுமக்களுக்கு மாம்பழங்கள் வழங்கினார்.

#TamilSchoolmychoice

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் கட்சிக்காரியாக வரவில்லை. வருஷா வருஷம் எங்க தோட்டத்து மாம்பழங்களை அம்மாவுக்குக் கொடுக்கிறது வழக்கம். இப்ப அம்மா இங்க இருக்காங்க.அதனால் இங்க கொடுக்கிறோம். எங்க அம்மாவோட உடல் வேண்டுமானால் மண்ணுக்குள் இருக்கலாம். ஆனால் அவங்களோட உழைப்பு, அன்பு, ஆட்சி தமிழ்நாட்டு மக்களோட மனசுல இருக்கு. அதனால தான் அம்மாவுக்குக் கொடுக்கிறதா நெனச்சு மாம்பழங்களை மக்களுக்குக் கொடுக்கிறோம். உடைந்து கிடக்கும் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும். நான் மீண்டும் அரசியல்வாதியாக, பேச்சாளராக, கட்சிக்காரியாக, அதிமுக தொண்டராக மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்” என்று விந்தியா தெரிவித்தார்.