Home Featured உலகம் சீனாவில் அறுவை சிகிச்சை மையத்தில் நடந்த அடிதடி சண்டை!

சீனாவில் அறுவை சிகிச்சை மையத்தில் நடந்த அடிதடி சண்டை!

916
0
SHARE
Ad

chinaoperationtheaterfightஹெனான் – சீனாவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில் இரு மருத்துவர்கள் அடிதடி சண்டை போட்டுக் கொண்ட காணொளி இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த மே 12-ம் தேதியிட்ட அந்தக் காணொளியில் இரு மருத்துவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். அதில் ஆண் மருத்துவர் ஒருவர் தனது கையுறையைக் கழற்றி அங்கிருக்கும் பெண் மருத்துவர் மீது வீசுகிறார்.

உடனே அந்தப் பெண் மருத்துவர், ஆண் மருத்துவரை கன்னத்தில் அறைய.. அவ்வளவு தான்.. அந்த ஆண் மருத்துவர் அப்பெண் மருத்துவரை முகத்தில் பலமுறை குத்தி, கீழே சாய்க்கிறார்.

#TamilSchoolmychoice

சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள லன்காவ் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அச்சம்பவம் நடந்த போது நோயாளி அங்கு இல்லை என்று தெரியவந்திருக்கிறது.