Home Featured இந்தியா இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திடீர் மரணம்!

இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திடீர் மரணம்!

927
0
SHARE
Ad

anilmadhavdaveபுதுடெல்லி – இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவால் திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அனில் மாதவ் தவேவின் மறைவு தனக்குப் பேரிழப்பு என்று தெரிவித்திருக்கிறார்.

நேற்று மாலை வரை அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து விவாதித்து கொண்டிருந்த அனில் மாதவ், தனது துறையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.