Home Featured கலையுலகம் அரசியல் கேள்வி வேண்டாம் – ரஜினி கண்டிப்பு!

அரசியல் கேள்வி வேண்டாம் – ரஜினி கண்டிப்பு!

810
0
SHARE
Ad

Rajiniசென்னை – நடிகர் ரஜினிகாந்த் நான்காவது நாளாக இன்று வியாழக்கிழமை தனது ரசிகர்களைச் சந்தித்தார்.

கடந்த 3 நாட்களாக ரசிகர்கள் தன்னுடன் கலந்துரையாட, புகைப்படம் எடுத்துக் கொள்ள, ஒத்துழைப்புக் கொடுத்தார்.

இந்நிலையில், ரசிகர்களுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ரசிகர்களுடனான சந்திப்பு அவர்களை விட எனக்கு இன்னும் கூடுதலாக மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், அரசியல் கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தயவு செய்து இனிமேல் என்னிடம் அரசியல் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ரஜினி கண்டிப்புடன் தெரிவித்தார்.

இந்நிலையில், ரசிகர்களைச் சந்திக்க கடைசி நாளான நாளை, கடந்த 3 நாட்கள் தன்னைப் பற்றி இணையதளம் கூறப்படும் கேலி, கிண்டல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் படியாக ரஜினி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.