கோலாலம்பூர் – செல்காம் ஆக்சியட்டா பெர்ஹாட் மற்றும் எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை மலேசியாவில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை முயற்சி செய்து பார்த்தன.
இதன் மூலம் உள்ளூர் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அடுத்தக்கட்ட நிலையை எட்டியிருக்கிறது.
இது குறித்து தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணை அமைச்சர் டத்தோ ஜைலானி ஜோஹாரி கூறுகையில், “5ஜி தொழில்நுட்பம் மிக அவசியமானது. உள்ளூரில் இருக்கும் அரசாங்கம், தனியார் தகவல்தொடர்பு, நிதி மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள், தங்களை மேம்படுத்திக் கொண்டு வரும் 2020-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக மாற இது மிகவும் அவசியமாகிறது” என்று தெரிவித்தார்.