ஹேக் (நெதர்லாந்து) – இங்குள்ள ஐக்கிய நாட்டு மன்றத்தின் அனைத்துலக நீதிமன்றத்தில், பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (படம்) சார்பில் கொண்டு வரப்பட்ட வழக்கில் இந்தியா வெற்றி பெற்றிருக்கின்றது.
இந்தியா முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட அனைத்துலக நீதிமன்றம், பாகிஸ்தான், இந்தியா சார்பில் ஜாதவ்வை தூதரக ரீதியாக சந்திப்பதற்கு அனுமதித்திருக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
மேலும், ஜாதவ்வுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவையும் அனைத்துலக நீதிமன்றம் பிறப்பித்தது.
அனைத்துலக நீதிமன்றத்தின் விசாரணைகள் நடந்து முடியும் வரை ஜாதவ் மீதான தூக்குத் தண்டனை நிறுத்திவைக்கப்பட வேண்டுமென ஹேக் நகரில் இன்று கூடிய அனைத்துலக நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.