புதுடில்லி – தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
தமிழகத்தின் தற்போதைய தேவைகள், நிலவரங்கள் குறித்துப் பிரதமருடன் பேசியதாகக் கூறிய பன்னீர் செல்வம், அரசியல் நிலவரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறி அத்தகைய கேள்விகளை பத்திரிக்கையாளர்களிடம் இருந்து தவிர்த்து விட்டார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையைப் பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
விவசாயிகளின் வங்கிக் கடன்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் முன் வைத்ததாகவும் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
அரசியல் பேசவில்லை என ஓபிஎஸ் கூறியிருந்தாலும் மோடியுடனான அவரது சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.